Sunday, 25 January 2015

இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India)

இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India)


இந்தியஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.

இந்தியா (India) அல்லது அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு, தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
 

இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று
 
 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர 26 ஜனவரி காந்தி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
 ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நாள் 1947 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்க்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ம் நாள் பாரளுமன்றத்தில் சமர்ப்பித்த்து.


2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக ஜனவரி 24 ஆம் நாள் 1950 ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓப்பதலுடன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் 2 கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையிழுத்திடப்பட்டது. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து 1948ல் சுதந்திரம் பெற்ற பின் 26 ஜனவரி நாளை குடியரசு தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.



தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது



நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுகிறார். கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன. மாநிலங்களில் மாநில ஆளுனர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும் அரசுத்துறை மிதவைகளையும் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார். சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

Friday, 23 January 2015

மேலவளவு வரைபம் (மேப் - Map)

மேலவளவு வரைபம்





கொட்டாம் பட்டி ஒன்றியம் 27 கிராம பஞ்சாயத்துக்களின் பட்டியல்

1.அட்டபட்டி - ATTAPATTI 2. அய்யாபட்டி - AYYAPATTI 3. பூதமங்கலம் - BOOTAHAMANGALAM
4. சொக்காம்பட்டி - CHOCKKAMPATTI 5. சொக்கலிங்காபுரம் - CHOKKALINGAPURAM 6. எட்டிமங்கலம் - ETTIMANGALAM
7. கம்பூர் - KAMBUR 8. கருங்காலகுடி - KARUNGALAKUDY 9. கச்சிராயன்பட்டி - KATCHIRAYANPATTI
10. கேசம்பட்டி - KESAMPATTI 11. கொடுக்காம்பட்டி - KODUKKAMPATTI 12. கொட்டாம்பட்டி - KOTTAMPATTI
13. குன்ராம்பட்டி - KUNRAMPATTI 14. மணப்பாச்சேரி - MANAPACHERI 15. மேலவளவு - MELAVALAVOO
16. பல்லாபட்டி - PALLAPATTI 17. பாண்டன்குடி - PANDANKUDY 18. பட்டூர் - PATTUR
19. பொட்டபட்டி - POTTAPATTI 20. சேக்கிபட்டி - SEKKIPATTI 21. சென்னாகரம்பட்டி - SENNAKARAMPATTI
22. சூரப்பட்டி - SOORAPATTI 23. சுக்காம்பட்டி - SUKKAMPATTI 24. தோதிலிங்காபுரம் - THOTHILINGAPURAM
25. தும்பைபட்டி - THUMBAIPATTI 26. வஞ்சிநகரம் - VANJINAGRAM 27. வேலைசேரிபட்டி - VELAICHERRYPATTI


மேலவளவு போலீஸ் வேட்டை: நாட்டுத் துப்பாக்கிகளுடன் 2 பேர் கைது

மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு அருகில் உள்ளது ஆலம்பட்டி. இந்த ஊரில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி அவரது உத்தரவின்பேரில் மேலவளவு போலீசார் ஆலம்பட்டியில் விசாரணை நடத்தினர்.
இதில் அதே ஊரைச் சேர்ந்த அழகன் மகன் பூமி (வயது 30), கிருஷ்ணன் மகன் பச்சை (50) ஆகியோர் சுமார் 3 அடி நீளமுள்ள இரண்டு நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த துப்பாக்கிகளில் பயன்படுத்துவதற்காக 24 சிறிய அலுமினியக் குண்டுகள் வைத்து இருப்பதும் தெரியவந்தது. இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களை பறிமுதல் செய்து இவற்றை வைத்திருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அழகர்மலைப் பகுதியில் முயல்வேட்டை மற்றும் பறவைகளை சுடுவதற்கு இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்ததாக தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ஊடகம்: தினத்தந்தி
நாள்: நவம்பர் 21

மேலவளவில் அறுந்து விழுந்த மின்கம்பியைதொட்ட கணவன், மனைவி பலியாயினர் (பழைய நினைவுகள்)

 மேலவளவில் அறுந்து விழுந்த மின்கம்பியைதொட்ட கணவன், மனைவி பலியாயினர்

மேலூர் : மதுரை மேலவளவு அருகே, கண்மாயில் அறுந்து விழுந்த மின்கம்பியைதொட்ட
கணவன், மனைவி பலியாயினர். மேலூர் அருகே மேலவளவு பகுதி வி.எஸ். நகரை சேர்ந்தவர்விவசாயி நல்லுச்சாமி,65. நேற்று அதிகாலை 6 மணிக்கு, மனைவி வீரம்மாளை,60, மேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ரோடு வசதி இல்லாததால், பரம்பகண்மாய் வழியாக நடந்து சென்றனர். நேற்று முன் தினம் பெய்த மழையால், வயல்வெளி கிணற்றுக்குசெல்லும் உயரழுத்த மின் வயர் ஒன்று, அறுந்து விழுந்தது. இதை கவனித்த நல்லுச்சாமி, வழியில் ஏதோ கம்பி கிடப்பதாக எண்ணி, அதை எடுத்து தள்ளிப் போட நினைத்து, மின் கம்பியை தொட்டார். மின்சாரம் அவர் மீதும், அவரது கையை பிடித்துக் கொண்டிருந்த வீரம்மாள் மீதும் பாய்ந்ததில், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதி மின்கம்பங்கள் சேதமான நிலையில் உள்ளன. சிலமாதங்களுக்கு முன், ஒருவர் மின்வயரை மிதித்து இறந்தார்.உடனடியாக இப்பகுதி மின்கம்பங்களை சீர் செய்ய, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊடகம்: தினமலர்
நாள்: செப்டம்பர் 17,2012
 

மேலவளவு சோமகிரி மலையில் மனிதத் தலை போல் தெரியும் பாறை

மனிதத் தலை போல் தெரியும் பாறை -சோமகிரிமலை மேலவளவு.

மழைக்கு ஒதுங்குன தாயும் பிள்ளையும் இடி இடிச்சு இப்படி கல்லா மாறிட்டாங்களாம்

மேலவளவு கருப்புக் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை (பழைய நினைவுகள்)

 


மேலவளவு சோமகிரி மலை கருப்புக் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை

மேலூர், அக். 5–

மேலூர் அருகே உள்ள மேலவளவு சோமகிரி மலையில் உள்ளது கருப்புக் கோவில். இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற கருப்புக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு.
இவர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு இதனை யாரோ உடைத்து அதில் இருந்த காணிக்கையை கொள்ளையடித்துள்ளனர். மேலும் கோவிலின் பீரோவையும் உடைத்து அதில் இருந்த சில பொருட்களையும் அபகரித்து சென்றுள்ளனர்.
இந்த துணிகர கொள்ளை குறித்து கோவில் பூசாரி பொன்னம்பலம், மேலவளவு போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளும் சேகரிக்கப்பட்டன.


 பதிவு செய்த பத்திரிக்கை :மாலைமலர் இணையதளம்Click Here

 

Thursday, 22 January 2015

மேலவளவு சேமகிரிமலையின் எழில் மிகு தோற்றம்

Photo Taken by Nithi






மேலவளவின் வரலாறு - HISTORY OF MELAVALAVU



மேலவளவின் வரலாறு  
                 பாரியின் பறம்பு நாடு என்ற தலைப்பில் ஆசிரியர் இரா.ஜெகதீசன் கட்டுரையாக வெளியிட்டுள்ளார் அவை உங்கள் பார்வைக்கு 

                  கடைச்சங்க காலத்தில் தமிழகப் பகுதியில் ஆட்சி செய்த வேளிர்களில் ஒருவன் பாரி. இவன் கொடைப் பெருமை பெற்றவன். இதனால் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகப் போற்றப்படுகிறான். இவனைப் பற்றிச் சங்ககாலப் புலவர்களான கபிலர், பெருஞ்சித்திரனார், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், புறத்திணை நன்னாகனார், நக்கீரர், ஔவையார், மிளைக்கந்தன், முன்றுறையரையனார், பாரி மகளிர் முதலியோர் பாடியுள்ளனர். பாரியின் நெருங்கிய நண்பராகவும், அவைப் புலவராகவும் கபிலர் திகழ்ந்தார். பாரியின் நாடு பறம்பு நாடு என்றும், இதில் முன்னூறு ஊர்கள் இருந்ததாகவும் புறம் – 110&ஆம் பாடல் குறிப்பிடுகிறது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின் படையெடுப்பால் பாரி கொல்லப்பட்டான்.
இவனது பறம்பு நாடு பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் சிவகங்கை மாவட்டம் பிரான்மலையே பாரியின் பறம்பு மலை என்றும், இப்பகுதியே பாரியின் பறம்புநாடு என்றும் குறிப்பிடுகின்றனர். மற்றும் சிலர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்திற்கு அருகில் உள்ள பர்கூர் மலையே பாரியின் பறம்பு மலை என்றும், இப்பகுதியே இவன் ஆட்சி செய்த பறம்பு நாடு என்றும் கருதுகின்றனர்.
பிரான்மலையே என்று கருத்துக் கூறுபவர்கள் பறம்பு மலை என்ற பெயர் பிற்காலத்தில் மருவி பிரான்மலை என்று அழைக்கப்படுகின்றது என்கின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் திருமோகூர், திருவாதவூர், மேலவளவு ஊர்க் கல்வெட்டுகள் இப்பகுதி தென்பறப்பு நாடு, வடபறப்பு நாடு ஆகிய நாட்டுப் பிரிவுகளில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. எனவே இம்மேலூரைச் சுற்றி இருந்த பகுதிகளோடு பிரான்மலை வரை பாரியின் பறம்பு நாடு பரவி இருந்தது என்று குறிப்பிடுகின்றனர். பாண்டிய மண்டலச்சதகமும் பாரியின் நாடு பாண்டிய நாட்டுப் பகுதியில் உள்ளதாகக் குறிப்பிடுகிறது என்கின்றனர்.
பிரான்மலை அடிவாரத்தில் உள்ள கொடுங்கைநாதர் கோயில் ஒரு பாடல் பெற்ற தலம். இங்குள்ள மலையை திருஞானசம்பந்தர் (கி.பி.7ஆம் நூற்றாண்டு) கொடுங்குன்றம் என்றே குறிப்பிட்டுள்ளார். பிரான்மலைக் கல்வெட்டுகளும் இவ்வூரைப் புறமலை நாட்டுக் கொடுங்குன்றம் என்றே குறிப்பிடுகின்றன. பறம்பு நாட்டுப் பிரிவு மேலூரைச் சுற்றிய பகுதியில் மட்டுமே அமைந்துள்ளதை இப்பகுதிக் கல்வெட்டுகள் சான்று காட்டுகின்றன.
பிரான்மலையில் பாரியைப் பற்றியோ, பறம்பு நாடு பற்றியோ எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. மேலும் பிரான்மலை பாரியின் காலத்தைச் சேர்ந்த பண்டைய ஊர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை. எனவே பறம்புமலை இன்றைய பிரான்மலை என்பதற்கு மாறுபட்டதாகவே உள்ளது. பர்கூர்மலைப் பகுதியை பறம்புமலைப் பகுதியாகக் கருதும் ஆய்வாளர்கள், இப்பகுதியில் உள்ள பாரியூர் என்ற ஊரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு தங்களது கருத்தை வெளிப்படுத்துகின்றனர். கொங்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்றான ஒடுவங்க நாட்டிற்குப் பாரி ஒடுவங்க நாடு என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதையும், பர்கூர்மலைக்கு வடபால் பாரிஈச்சுரம் என்ற கோயில் உள்ளதாகக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இவ்வூரின் பழமைக்குச் சான்றாகத் திகழ்பவை இங்குள்ள அமரபணியீசுவரர் கோயில் கல்வெட்டுகளே. இக்கல்வெட்டுகளில் பழமையானது கி.பி. 13&ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரபாண்டியனின் கல்வெட்டே. இதற்கு மேலும் இவ்வூர் பழமையான ஊர் என்பதற்குப் பண்டைய சான்றுகள் ஏதுவும் இதுவரை இங்குக் கிடைக்கவில்லை. பாரி ஒடுவங்க நாடு என மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு மட்டுமே குறிப்பிடுகிறது.


ஒடுவங்க நாடும் பிற்காலத்தில் கொங்கு நாட்டின் எல்லையில், கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் உருவானதே ஆகும். பாரியூர் காஞ்சிக்கூவல் நாட்டுப் பகுதியைச் சேர்ந்ததாகவே கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பாரி என்பதற்கு பக்கம், பாதுகாப்பு என்ற பொருளை அகராதிகள் குறிப்பிடுகின்றன. பாரிஈச்சுரம் என்ற கோயில் பற்றிச் சரியான கல்வெட்டுச் சான்றைக் கூறாமல் பொதுவாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன என்கின்றனர்.
சங்ககால மன்னர்களுக்குக் கோயில்கள் கட்டியதாக இதுவரை சான்றுகள் இல்லை. கொங்கு நாட்டு வரலாற்றைக் கூறும் கொங்குமண்டல சதகங்கள் பாரியின் சமகாலத்தைச் சேர்ந்த அதியமான், குமணன், ஓரி, பேகன் முதலியோர் கொங்கு நாட்டுப் பகுதியை ஆட்சி செய்ததாகக் குறிப்பிடுகின்றன. ஆனால் பாரி கொங்குப் பகுதியை ஆட்சி செய்ததாகக் குறிப்பிடவில்லை. எனவே பாரி கொங்குப் பகுதியில் ஆட்சி செய்யவில்லை என்றே கருதலாம்.


          மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில், மேலூரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ளது மேலவளவு என்ற ஊர். இவ்வூருக்கு மேற்கில் அழகர்மலை, முறிமலைக்குன்று, சோமகிரிக்குன்று முதலிய மலைகள் அமைந்துள்ளன. இம்மலைப் பகுதியில் விழும் மழை நீரைத் தேக்கி மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.1238&-ஆம் ஆண்டு ஏரியையும், அதைப் பாதுகாக்கும் விதத்தில் கலிங்கையும் கட்டிவைத்துள்ளான். இதைப் பற்றிய கல்வெட்டுச் சான்று ஒன்றும் அங்குள்ளது

மேலவளவு (Melavalavu) Photo by Nithi

 இதைத் தவிர, இந்த ஏரியின் நீர்நிர்வாகத்தைப் பற்றி கி.பி. 1415-ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னன் மல்லிகார்ச்சுனராயரின் மகன் விருபாக்சராயனின் கல்வெட்டு ஒன்றும் இங்குப் பொறிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள கல்வெட்டுகளில் இவ்வூர் வடபறப்பு நாட்டு அழகர் திருவிடையாட்டம் பறம்பான திருநாராயணமங்கலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இவ்வூரின் பழைய பெயர் பறம்பு என்றும், இது வடபறப்பு நாட்டுப் பிரிவில் அமைந்திருந்தது என்றும், இடைக்காலத்தில் (கி.பி.10-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை) இவ்வூர் பிராமணர்களின் ஊராகவும், திருநாராயணமங்கலம் என்று பெயர்மாற்றம் பெற்றும் அழகர்கோவிலுக்குக் (திருவிடையாட்டம்) கொடை கொடுக்கப்பட்ட ஊராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாண்டிய நாட்டுப் பிரிவுகளில் ஒன்று பறப்பு நாடு என்பதாகும். இந்நாட்டுப் பிரிவு இவ்வூரின் பெயரில் உருவான பெயராகக் கருதலாம். மேலூருக்கு அருகில் உள்ள பனங்காடி என்ற ஊரில் உள்ள கி.பி. 13&ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலக் கல்வெட்டில் பறப்பு நாடு என்றும், பின்னர் இந்நாட்டுப் பிரிவு வடபறப்பு நாடு என்றும், தென்பறப்பு நாடு என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மேலவளவிற்குத் தெற்கே உள்ள பகுதி தென்பறப்பு நாடு என்றும், இவ்வூரும், இவ்வூருக்கு வடக்குப் பகுதியும் வடபறப்பு நாடு என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.



இதன்படி இந்த ஊரை மையப்படுத்தியே இந்நாட்டுப் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே இந்நாட்டுப் பிரிவின் தலைநகராக இவ்வூரைக் கருதலாம். இடைக்காலத்தில் பிராமணர்களின் ஊர்கள் அனைத்தும் வளமையான ஊர்களாகவே இருந்தன. அதன் அடிப்படையில்தான் இவ்வூர் பிராமணர்களின் ஊராகவும், அழகர்கோயிலுக்குக் கொடை கொடுக்கப்பட்ட ஊராகவும் இருந்துள்ளது.
இங்குள்ள கல்வெட்டுகள் இவ்வூரின் நீர் செழுமை பற்றியும், வேளாண்மையின் வளமை பற்றியும் குறிப்பிடுவதிலிருந்து இவ்வூர் எல்லா வளமும் பெற்ற ஊராகத் திகழ்ந்துள்ளது எனக் கருதலாம். தற்போது இவ்வூரில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மக்களின் ஈமச்சின்னமான கல்வட்டத்துடன் கூடிய கல்பதுக்கைகள், நெடுநிலை நடுகல் முதலியவற்றைக் கட்டுரையாளர் கள ஆய்வின் போது கண்டறிந்துள்ளார்.
எனவே இவ்வூர் பண்டைய ஊர் என்பதும், பண்டைய பெயர் பறம்பு என்பதும், தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புப் பெற்ற ஊராகத் திகழ்ந்து வந்துள்ளதும், பாண்டிய மண்டல சதகம் பாரியின் நாடு பாண்டிய நாட்டுப் பகுதியில் உள்ளதாகக் குறிப்பிடுவதும் கொண்டு மேலவளவைச் சுற்றிய பகுதியே சங்ககால வேளிர் பாரியின் பறம்பு நாடு எனலாம். இன்றும் இவ்வூரில் உள்ள ஏரி பறம்புக் கண்மாய் என்றே அழைக்கப்படுகிறது என்பது நோக்கத்தக்கதாகும். .
மேலும் சங்ககால ஊர்களான தாண்டிக்குடி, பொருந்தல், கொடுமணல் முதலிய ஊர்கள் அகழாய்வின் மூலமாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது போன்று இங்கும் அகழாய்வுகள் மேற்கொண்டால் இவ்வூரின் உண்மைத்தன்மை வெளிப்படும்.
பாரியின் பறம்பு நாடு
இரா.ஜெகதீசன்

 எங்கள் ஊரைப்பற்றி அரியவைத்த ஆசிரியர்  அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி மேலும் உங்களது ஆய்வுக் கட்டுரைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

பி.டி.எப் கோப்பாக
நீங்கள் பதிவிறக்க
இங்கு கிளிக் செய்யுங்கள்

FeedBurner will send a confirmation message:

Click the verify link in it to start your subscription

Eve Jackson 94>
test Doe 80