மேலவளவில் அறுந்து விழுந்த மின்கம்பியைதொட்ட கணவன், மனைவி பலியாயினர்
மேலூர் : மதுரை
மேலவளவு அருகே, கண்மாயில் அறுந்து விழுந்த மின்கம்பியைதொட்ட
கணவன், மனைவி பலியாயினர். மேலூர் அருகே மேலவளவு பகுதி வி.எஸ். நகரை
சேர்ந்தவர்விவசாயி நல்லுச்சாமி,65. நேற்று அதிகாலை 6 மணிக்கு, மனைவி வீரம்மாளை,60,
மேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ரோடு வசதி இல்லாததால்,
பரம்பகண்மாய் வழியாக நடந்து சென்றனர். நேற்று முன் தினம் பெய்த மழையால், வயல்வெளி
கிணற்றுக்குசெல்லும் உயரழுத்த மின் வயர் ஒன்று, அறுந்து விழுந்தது. இதை கவனித்த
நல்லுச்சாமி, வழியில் ஏதோ கம்பி கிடப்பதாக எண்ணி, அதை எடுத்து தள்ளிப் போட
நினைத்து, மின் கம்பியை தொட்டார். மின்சாரம்
அவர் மீதும், அவரது கையை பிடித்துக் கொண்டிருந்த வீரம்மாள் மீதும் பாய்ந்ததில்,
இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதி
மின்கம்பங்கள் சேதமான நிலையில் உள்ளன. சிலமாதங்களுக்கு முன், ஒருவர் மின்வயரை
மிதித்து இறந்தார்.உடனடியாக இப்பகுதி மின்கம்பங்களை சீர் செய்ய, மின்வாரியம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊடகம்: தினமலர்
நாள்: செப்டம்பர் 17,2012
நாள்: செப்டம்பர் 17,2012
