Sunday, 11 January 2015

மேலவளவு கொலையும் மற்றும் அதன் பிண்ணனியும் 2012 உண்மை சம்பவம்

வணக்கம்,

                                          இது ஓர் உண்மைசம்பவம் 

மதுரை மாவட்டம் மேலூர் தாலூகா கொட்டாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த மேலவளவில் கிராம்த்தில் 26.08.2012 அன்று ஞாயிறு மாலை 7.30 மணியளவில் பஞ்சாயத்து தலைவர் திரு.வி.விஐயராகவன் வயது 45 கத்தியால் தாக்கப்பட்டு மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் .

இந்த சம்பவத்தின் பின்னனி உங்கள் பார்வைக்கு

இந்த வழக்கை விசாரித்தவர் காவல் துறை உயர் அதிகாரி திரு.பாலகிருஷ்ணன் அவர்கள்

மேலவளவு ஜாதி பிரச்சனை  1997ம் ஆண்டு மிகப்பெரியளவில் பேசப்பட்து அதற்கு பழிவாங்கும் விதமாக இந்த சம்பவம் நடந்ததாக அனைவராலும் கருதப்படுகிறது  ஆனால் இதன் பின் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும் கருதப்படுகிறது.

மேலவளவு பஞ்சாயத்து தலைவர் திரு.விஜயராகவன் வீடு இராசினாம்பட்டியிலூம் அவரது தாயார் வீடு ஊரணியிலூம் அமைந்துள்ளது. இந்த ஊரணி என்பது இராசினாம்பட்டிக்கும் மேலவளவிற்க்கும் மத்தியில் அமைந்துள்ளது இது மக்கள் குடிக்க பயன்படுத்தும் நீர்நிலையாகும் .திரு.விஜயராகவன் அமைதியானவர் யாரிமும் எந்த வம்புக்கும் போகாதவர் உடல் அளவிலும் மெலிந்து காணப்படுபவர். இவருக்கு முன் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர்  திரு.மலைச்சாமி இவர்கள்  இருவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள்.

மேலவளவின் ஒரு பகுதியாக காலனி  உள்ளது தற்போதைய அம்பேத்கார் நகர் மேலூரில் இருந்து மேலவளவிற்க்கு செல்லூம்போது இருக்கும் முதல் ஸ்டாப் இது தான்  இங்கு தலித்துகளும் மற்ற உயர்ஜாதியினரும் மற்ற தலித்அல்லாத மக்களும் இருக்கின்றனர். இங்கு வசித்த திரு.முருகேசன் என்பவர் 1997ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்றார் இவர் ஒரு தலித் என்பது குறிப்பிடத்தக்கது.
1997ம் ஆண்டு ஜாதிபிரச்சனையில் கொல்லப்பட்ட அப்போதைய பஞ்சாயத்து தலைவர் திரு.முருகேசன் அவர்களது மகன் விமல்ராஜ் வயது 30 அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து தன் தந்தையின் இறப்புக்கு பழிவாங்கும் விதமாக விஜயராகவனை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இவர்கள் திட்டம் விஜயராகவன் வீட்டிற்க்கு செலலும் வழியில் வழி மறித்து தானும் ஒரு வேலையாக உடன் வருவதாக கூறி  வண்டியின் பின்பகுதியில் அமர்ந்து யாரும் இல்லாத இடத்தில் வண்டியில் இருப்பவர் கத்தியால் குத்த அவர் விழுந்தவுடன் அங்கு மறைந்து இருப்பவர்கள் ஓடிவந்து திட்டத்தை அறங்கேற்றுவது இதை நிறைவேற்றவேண்டிய நாளுக்காக காத்திருந்நதனர்.
அந்த நாளும் வந்தது அன்று இரவு 7.30 மணியளவில் திரு.விஜயராகவன் மேலவளவில் இருந்து இராசினாம்பட்டியில் இருக்கும் தன் வீடு நோக்கி பயணம் ஆனார் சதிகாரர்களின் திட்டப்படி விமல்ராஜ் என்பவர் வழி மறித்தார்  விமல்ராஜை நோக்கி என்ன என்று கேட்க தானும் அந்த ஊரில் உள்ளவரை சந்திக்க வருவதாக கூறினார் சரி வா என்று விஜயராகவனும் அனுமதித்து வண்டியின் பின்னால் அமரவைத்து இருவரின் பயணமும் தொடங்கியது.அப்போது விஜயராகவன் நன்றாக படிக்க வேண்டும் எதாவது உதவி என்றால் என்னிடம் சொல் என்னால் முடிந்தவரை உதவுகிறேன் என்றெல்லாம் வஞ்சகத்துடன் பின்னால் அமர்ந்திருக்கும் விமல்ராஜிடம் சொல்லிக்கொண்டே இருவரும் பயணிக்கின்றனர் .

சதித்திடம் நிறைவேற்ற வேண்டிய இடமும் நெருங்கிக்கொண்டிருக்கிறது நம் திட்டப்படி அப்பகுதியில் யாரும் இல்லை வண்டி ஊரணியைதாண்டி சிறிது தூரம் சென்றவுடன் நண்பர்களும் காத்திருக்கிறார்கள் அவர்களுடன் சேர்ந்து இவர கதையை முடித்துவிடவேண்டியதுதான் என்ற எண்ணம் விமல்ராஜ்க்கு மேலோங்க  ஊரணிக்கு முன்பாகவே தீடீர் என வண்டீயின் வேகம் குறைகிறது விஜயராகவன் மனதில் தன் தாய்வீட்டிற்க்கு செல்ல எண்ணம் உதிக்கிறது அதை கூறி நீ இங்கிருந்து நடந்து போ என கூறிக்கொண்டே வண்டீயின்வேகம் குறைகிறது. என்னசெய்வது என்று அறியாமல் தன் திட்டம் தோற்றுபோகுமோ இன்னும் சிறிது தூரம் சென்றால் சதி திட்டத்தை செயல்படுத்திவிடலாம் வண்டி நின்றால் எல்லாம் தவிடு பொடியாகிவிடும் நண்பர்களும் கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறார்கள்  வண்டி நிற்கும்முன் திட்டத்தை தனியாக செயல்படுத்திவிட்டு நண்பர்களை கூப்பிடவேண்டியதுதான் வேற வழியில்லை என எண்ணத்துடன் வண்டி நிற்கும்முன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயராகவனை விம்ல்ராஜ் குத்த விஜயராகவன்  உம்பில் இருந்து இரத்தம் பீரிட்டு வெளிவந்தது அந்த இடத்திலே நிலைதடுமாறி வண்டியுடன் கீழே விழுந்தார் விமல்ராஜ் வண்டியில் இருந்து குதித்துவிட்டான் பின் நண்பர்களை சத்தம்மிட்டு கூப்பிட்டான் அவர்கள் ஓடி வந்துகொண்டிருக்கும்போது சிறிது தூரத்தில் கார் ஒன்று அந்தவழியாக வர அவர்கள் அனைவரும் செய்வது அறியாது அவர்கள் திட்டத்தை பாதியில் கைவிட்டு ஓட்டம் எடுத்தனர். காரில் வந்தவர்கள் உயிருக்கு போரடிக்கொண்டிருக்கும் விஜயராகவனை கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். 
இதைஅறிந்த மக்கள் கொதித்துவிட்டனர் உடனடியாக பஸ்மறியல் செய்தனர். இதன்காரணமாக ஜாதிசண்டை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதில் விஜயராகவன் உறுதியாக இருந்தார் அதனால் மக்களிடம் இந்தபிரச்சனையை காவல்துறை அனுகட்டும் தயவுசெய்து யாரும் உணர்ச்சிவசப்படக்கூடாது எனக்கூறி அவர்களை அமைதிப்படுத்தி மிகப்பெரிய கலவரத்தை தடுத்திருக்கிறார்.

காவல்துறை விமல்ராஜை தேடத்தொடங்கியது அன்று மக்கள் சிலர் மலைச்சாமியுடன் சதிகாரனை  சில நாட்களுக்கு முன் பார்த்ததாக கூறினர்.

அன்றைய நாளில் இவருக்கு முன்னால் பஞ்சாயத்து தலைவராக இருந்த மலைச்சாமி தலைமறைவானார் இவருக்கும் சதித்திட்த்திற்க்கும் எதாவது தொடர்புண்டா என மக்கள் அரசல் புரசலாக பேசிக்கொண்டனர். சிலர் சில தினங்களுக்குமுன் மலைச்சாமியுடன் விமல்ராஜ்  வண்டியில் சுற்றித்திரிந்ததாகவும் பேசப்படுகிறது. மேலும் மலைச்சாமி தேர்தலில் நிற்கவில்லை என கூறி விட்டு தேர்தலில் விஜயராகவனை எதிர்த்து நின்று தோற்றுப்போனார் இதன் காரணமாக இவர் விமல்ராஜை சந்தித்திருக்கிறார்  விமல்ராஜிடம் உன் தந்தைக்காக பழிதீர்ததாக கூறி விஜயராகவனை கொன்றுவிடு யார்மீதம் சந்தேகம் வராது உன்னையும் பெருமையாக பேசுவார்கள் உன்னை ஜாமீனில் நான் கொண்டுவருகிறேன் உனக்கு பைக்வாங்கிதருகிறேன் மற்றும் பணமும் தருகிறேன் என ஆசை வார்த்தைகளை கூறி விமல்ராஜை தன் வசப்படுத்திருக்கிறார்  அதற்காக திட்டம்தீட்டி கொடுத்திருக்கிறார்  மலைச்சாமி திட்டத்தை செயல் படுத்துவற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பைக்கில் கூட்டிக்கொண்டு போகையில் மக்கள் இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்திருக்கின்றனர் மேலும் சிலர் அடிக்கடி விமல்ராஜை மலைச்சாமிவீட்டில் பார்த்தாகவும் சொல்கிறார்கள். 

ஒருவர் ஜாதிகலவரத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறார் இன்னொருவர் ஜாதிகலவரத்தைதூண்டி அதில் ஆதாயம் தேடப்பார்த்திருக்கிறார் .
இந்த பதவி ஆசை எத்தனை பேர்களை பழிவாங்கப்பார்க்கிறது வருங்கால இளைஞர்களே விழித்துக்கொள்ளுங்கள்.

உண்மை என்றாவது ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்தே தீரும் .
உங்கள் கருத்துக்கள் தயவுசெய்து பதிவுசெய்யுங்கள். 


Note:Related New " The Times of  India" Articles Melavalavu panchayat chief attacked, tension in village

Show Comments: OR

No comments:

Post a Comment

பி.டி.எப் கோப்பாக
நீங்கள் பதிவிறக்க
இங்கு கிளிக் செய்யுங்கள்

FeedBurner will send a confirmation message:

Click the verify link in it to start your subscription

Eve Jackson 94>
test Doe 80