இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India)
இந்தியஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.
இந்தியா (India) அல்லது அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு, தெற்காசியாவில்
உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள்
அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா என்ற பெயர்
சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று
1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர 26 ஜனவரி காந்தி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நாள் 1947 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை
உருவாக்குவதற்க்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர்
நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ம் நாள்
பாரளுமன்றத்தில் சமர்ப்பித்த்து.
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து
அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக ஜனவரி 24 ஆம் நாள் 1950 ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓப்பதலுடன் ஆங்கிலம் மற்றும்
ஹிந்தி மொழியில் 2 கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையிழுத்திடப்பட்டது.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து 1948ல் சுதந்திரம் பெற்ற பின் 26 ஜனவரி நாளை
குடியரசு தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து
செயல்படுத்தியது.
தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு
மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில்
விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்,
அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு
வருகிறது

நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக
இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில்
குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப்
பார்வையிடுகிறார். கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த
படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன. மாநிலங்களில் மாநில
ஆளுனர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும் அரசுத்துறை மிதவைகளையும் பண்பாட்டு
நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார். சிறந்த காவலர்களுக்கு விருதுகள்
வழங்கப்படுகின்றன.

